அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல் திருமணம்
அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல் திருமணம்

அதியா ஷெட்டியை மணந்தார் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்

Published on

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், தனது காதலி அதியா ஷெட்டியை மணந்துள்ளார். அவர்களது திருமணம் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்றுள்ளதாக தகவல்.

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் இப்போது மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். அதியா ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். அதியாவும் திரைப்படங்களில் நடித்துள்ளார். இருவரது காதல் குறித்த தகவல் கசிந்து வந்த நிலையில் அவர்கள் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் சொல்லவில்லை.

தற்போது நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதை பயன்படுத்தி தனது திருமணத்தை அவர் நடத்தியுள்ளார். இதில் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். வரவேற்பு நிகழ்வு பின்னொரு நாள் விமரிசையாக நடத்தப்படும் என தகவல்.

அவர்கள் இருவரும் மண வாழ்வில் இணைந்த படங்கள் தற்போது சமூக வலைதளத்தை ஆட்கொண்டுள்ளன. பலரும் புதுமண தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in