Published : 22 Jan 2023 06:47 AM
Last Updated : 22 Jan 2023 06:47 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 27-ம் நிலை வீரரான இத்தாலியின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 (9-7), 6-3, 6-4 என்றசெட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
24-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டா பவுதிஸ்டா அகுட்டி 6-1, 6-7 (7-9), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 66-ம் நிலை வீரரான ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரேவை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 5-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபலெவ், 9-ம் நிலை வீரரான கனடாவின் ஹோல்கர் ரூன் ஆகியோரும் 4-வது சுற்றில் நுழைந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 5-ம் நிலை வீராங்கனையான பெல்லாரசின் சபலெங்கா 6-2, 6-3 என்ற நேர் செட்டில் 26-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
12-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 6-2, 7-5 என்ற கணக்கில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியையும், 23-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஸெங் ஷூவாய் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கேட்டி வோலினெட்ஸையும், 30-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் வர்வரா கிராச்சேவாவையும் தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT