Published : 22 Jan 2023 06:43 AM
Last Updated : 22 Jan 2023 06:43 AM

IND vs NZ 2-வது ஒருநாள் போட்டி: மறதிக்குள்ளான ரோஹித் சர்மா

ராய்பூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 179 பந்துகளை மீதம் வைத்து8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிதொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்தநியூஸிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் ஓவரிலேயே மொகது ஷமி, ஃபின் ஆலனை (0) போல்டாக்கினார்.

ஹென்றி நிக்கோல்ஸ் 2 ரன்னில் மொகமது சிராஜ் பந்தில் நடையை கட்டினார். அதிரடி வீரரான டேவன் கான்வே (7), ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். இதே பாணியில் டேரில் மிட்செலை (1)பெவிலியனுக்கு திருப்பினார் மொகமது ஷமி. டாம் லேதம் 17 பந்துகளில்ஒரு ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார்.

10.3 ஓவர்களில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தநியூஸிலாந்து அணியால் சரிவில்இருந்து மீள முடியாமல் போனது.முதல் ஆட்டத்தில் அதிரடியாக சதம்விளாசி கடும் அச்சுறுத்தல் கொடுத்த மைக்கேல் பிரேஸ்வெலை 22 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் ஷமி. சற்று தாக்குப்பிடித்து விளையாடிய கிளென் பிலிப்ஸ் 36 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்திலும், மிட்செல் சாண்ட்னர் 27 ரன்னில் ஹர்திக்பாண்டியா பந்திலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். லாக்கி பெர்குசன் 1, பிளேர் டிக்னர் 2 ரன்களில் வெளியேறினர்.

கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் கூட்டாக 85 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாகவே நியூஸிலாந்து அணியால் 100 ரன்களை எட்ட முடிந்தது. கிளென் பிலிப்ஸ், பிரேஸ்வெல் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றது. ஆனால் இந்த கூட்டணியை ஷமி பிரித்தார். இதைத் தொடர்ந்து பிலிப்ஸ், மிட்செல்சாண்ட்னர் கூட்டணி 47 ரன்கள் சேர்த்தது. இந்த கூட்டணியை ஹர்திக் பாண்டியா முறியடித்தார்.

இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 6 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 6 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 16 ரன்களை வழங்கி 2 விக்கெட்களைசாய்த்தார். வாஷிங்டன் சுந்தர் 2விக்கெட்களையும் மொகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், குல்தீப்யாதவ் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டையும் கைப்பற்றினர்.

109 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 20.1 ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 50 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், விராட்கோலி11 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 40, இஷான் கிஷன் 8 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இரு அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் வரும் 24-ம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது.

மறதிக்குள்ளான ரோஹித் சர்மா..: ராய்பூர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தன்னுடைய முடிவை அறிவிக்கத் தடுமாறினார். தலையில் கை வைத்தபடி10 நொடிகளுக்கு மேல் யோசித்தரோஹித் சர்மா அதன் பின்னர்பந்துவீச்சைத் தேர்வு செய்வதாக கூறினார். ஏற்கெனவே அணியினருடன் எடுத்திருந்த முடிவை ஒரு கணம் மறந்துவிட்டதாக கூறி தனது செயலை எண்ணி சிரித்தார் ரோஹித் சர்மா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x