

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அசாம் அணியை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 540 ரன்கள்குவித்து ஆட்டமிழந்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் 153, விஜய்சங்கர் 112 ரன்கள் விளாசினர். அசாம் அணி முதல் இன்னிங்ஸில் 100.2 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. 216 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய அசாம் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 88.1 ஓவர்களில் 204 ரன்களுக்கு சுருண்டது.
இதனால் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அசாம் அணி சார்பில் அதிகபட்சமாக ரிஷவ் தாஸ் 58, ராகுல் ஹசரிகா 40 ரன்கள் சேர்த்தனர். தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 5 விக்கெட்களையும் பாபா அபராஜித், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.