ஐஎஸ்எல் கால்பந்து | சென்னையின் எப்சி – ஏடிகே இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து | சென்னையின் எப்சி – ஏடிகே இன்று பலப்பரீட்சை
Updated on
1 min read

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி – ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதும்ஆட்டம் இன்று இரவு 7.30 மணிஅளவில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

சென்னையின் எப்சி இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகளை பெற்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடம் வகிக்கிறது.

6-வது இடம் வகிக்கும் கோவாவுக்கும் சென்னையின் எப்சிஅணிக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 4 ஆக உள்ளது. சென்னை அணிக்கு இன்னும் 7 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் 4 ஆட்டங்களை தொடர்ச்சியாக தனது சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.

இந்த வகையில் இன்று இரவு 7.30 மணி அளவில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் ஏடிகே மோகன்பகானுடன் மோதுகிறது சென்னையின் எப்சி அணி.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் சென்னையின் எப்சி, எஞ்சியுள்ள ஆட்டங்களில் கணிசமான வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

சென்னையின் எப்சி தனதுகடைசி இரு ஆட்டங்களையும் டிராவில் முடித்திருந்தது. அதேவேளையில் 23 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடம் வகிக்கும் ஏடிகே மோகன் பகான் அணி தனதுகடைசி ஆட்டத்தில் மும்பை சிட்டியிடம் தோல்வி அடைந்த நிலையில் தற்போது சென்னையின் எப்சி-யுடன் மோதுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in