காமன்வெல்த்: பூனம் யாதவுக்கு வெண்கலம்

காமன்வெல்த்: பூனம் யாதவுக்கு வெண்கலம்
Updated on
1 min read

மகளிர் 63 கிலோ எடை பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் நைஜீரியாவின் அடீசன்மி, ஒபியோமா ஒகோலி ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தட்டிச்சென்றனர்.

அவர்கள் இருவரும் தலா 207 கிலோ எடையைத் தூக்கினாலும், ஸ்னாட்ச் பிரிவில் அதிக எடையைத் (91 கிலோ) தூக்கியதன் மூலம் அடீசன்மிக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. பூனம் யாதவ் 202 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான வந்தனா குப்தா 198 கிலோ எடையைத் தூக்கி 4-வது இடத்தைப் பிடித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in