28 வயது இமாச்சல பிரதேச பந்துவீச்சாளர் சித்தார்த் சர்மா காலமானார்

காலமான சித்தார்த் சர்மா | கோப்புப்படம்
காலமான சித்தார்த் சர்மா | கோப்புப்படம்
Updated on
1 min read

வதோதரா: 28 வயதான இமாச்சல பிரதேச கிரிக்கெட் அணி வீரர் சித்தார்த் சர்மா காலமானார். கடந்த இரண்டு வார காலமாக மருத்துவமனையில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் வியாழன் அன்று உயிரிழந்துள்ளார்.

பந்து வீச்சாளரான அவர் கடைசியாக கடந்த டிசம்பரில் அவர் ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கு வங்க அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

“இது நடந்தது துரதிர்ஷ்டவசமானது. நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் முதல் 2 போட்டிகளில் அவர் விளையாடி இருந்தார். அவருக்கு திடீரென பரோடா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக உடல் நலம் குன்றியது. மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு கிரியேட்டினின் அளவு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. சிறுநீரகம் உட்பட சில உறுப்புகள் செயலிழந்தன.

மருத்துவர்கள் இயன்றவரை முயற்சித்தோம் அவரை காக்க முடியவில்லை. இந்த சிகிச்சையின் போது அவர் கொஞ்சம் தேறி வந்தார். இருந்தும் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது” என இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தற்போதைய தலைவருமான அருண் துமால் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-18 சீசனில் முதல் தர கிரிக்கெட்டில் சித்தார்த் அறிமுகமாகி உள்ளார். இமாச்சல பிரதேச அணிக்காக ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் அவர் விளையாடி வந்துள்ளார். அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி வருவதாக தகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in