509 சர்வதேச போட்டிகள்... 24,208 ரன்கள்... - ‘இந்திய அணியின் வாத்தி’ ராகுல் திராவிட் பிறந்தநாள் பகிர்வு

ராகுல் திராவிட் | கோப்புப்படம்
ராகுல் திராவிட் | கோப்புப்படம்
Updated on
2 min read

இந்தியாவை வெல்ல வேண்டும் என்றால் அது ராகுல் திராவிட் எனும் பெருஞ்சுவரை தகர்த்தால் மட்டும்தான் முடியும் என முன்னொரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் அவரது விக்கெட்டை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்பட்டது உண்டு. அந்த அளவுக்கு ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் படைத்தவர். எந்தவித ஆர்பாட்டமோ, அதிரடியோ இல்லாமல் பூப்பாதையில் அமைதியாகவும், நேர்த்தியாகவும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் திராவிட். அவருக்கு இன்று பிறந்தநாள்.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது பேட்டால் கோலோச்சிய ஜாம்பவான்களில் ஒருவர். பவுலர்கள் வேக வேகமாக வந்து வீசும் பந்தை மிகவும் கூலாக தடுத்து ஆடும் கலையில் கைதேர்ந்தவர். சிறந்த தடுப்பாட்டக்காரர். அணியின் வீரராக, விக்கெட் கீப்பராக, கேப்டனாக என பன்முக வீரராக செயல்பட்டவர். இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற பொறுப்பை கவனித்து வருகிறார்.

இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தது. அனுபவம் மற்றும் இளமை என இரண்டும் இணைந்த இந்திய அணியை கட்டமைத்து வருகிறார். எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இவரது சீரான பயற்சியின் கீழ் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரது குறைந்த ஸ்ட்ரைக் ரேட் காரணமாக இந்திய ஒருநாள் அணியில் இருந்து டிராப் செய்யப்பட்டார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்தவர். மிகவும் டெக்னிக்கலாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்.

அவரது சாதனை துளிகள்..

  • இந்திய அணிக்காக மொத்தம் 509 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 24,208 ரன்கள் எடுத்துள்ளார். 164 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 344 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒரே ஒரு டி20 போட்டியிலும் விளையாடி உள்ளார்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 36 சதங்கள் மற்றும் 63 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 12 சதங்கள் மற்றும் 83 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சராசரி 52.31. ஒருநாள் கிரிக்கெட்டில் 39.17.
  • Mr.Dependable மற்றும் The Wall என பிரியமாக அழைக்கப்படுபவர்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்டு விளையாடிய வீரர். மொத்தம் 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
  • அதே போல கிரீஸில் 44,152 நிமிடங்கள் விளையாடி உள்ளார். இந்த லிஸ்டிலும் அவர்தான் டாப்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் உடன் இணைந்து 6,920 ரன்கள் எடுத்துள்ளார்.
  • சச்சின், ரிக்கி பாண்டிங் மற்றும் கல்லிஸ் போன்ற வீரர்களுக்கு அடுத்தபடியாக சர்வதேச டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் உள்ளார். மொத்தம் 13,288 ரன்கள் எடுத்துள்ளார்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 210 கேட்ச்களை பிடித்துள்ளார்.
  • 2004-ல் ஐசிசி சிறந்த கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். அதே ஆண்டில் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதையும் வென்றுள்ளார்.
  • 2018-ல் ஐசிசி ஹால் ஆப் பேம் விருதையும் வென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in