மீண்டும் மஞ்சள் ஜெர்ஸியில் டூப்ளசி: 6 அணிகள், 33 போட்டிகளுடன் நாளை தொடங்கும் SA20 லீக்!

SA20 2023 டி20 லீகில் பங்கேற்கும் ஆறு அணிகளின் கேப்டன்கள்
SA20 2023 டி20 லீகில் பங்கேற்கும் ஆறு அணிகளின் கேப்டன்கள்
Updated on
2 min read

டர்பன்: நம் நாட்டில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் தொடரை போலவே தென் ஆப்பிரிக்க நாட்டில் SA20 லீக் எனும் ஃப்ரான்சைஸ் டி20 தொடர் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. இதற்கான ஏலம் கடந்த செப்டம்பரில் நடந்திருந்தது. இந்த முதல் சீசனில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 33 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மஞ்சள் நிற ஜெர்ஸியில் மீண்டும் களம் காண உள்ளார் டூப்ளசி.

நாளை (ஜனவரி 10) தொடங்கும் இந்த தொடர் வரும் பிப்ரவரி 11 வரை நடைபெற உள்ளது. இந்த லீக் தொடரை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ளது. இதில் விளையாட உள்ள ஆறு அணிகளையும், ஆறு ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தான் வாங்கியுள்ளன.

கிரிக்கெட் களத்தில் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருவதும், அதற்கு கிடைத்துள்ள வரவேற்பும், அதற்கு பின்னால் உள்ள வணிகமும்தான் இந்த லீக் தொடர் துவங்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

ஐபிஎல் போலவே சர்வதேச கிரிக்கெட் உலகில் பெரிய ஆட்டக்காரர்கள் இந்த தொடரிலும் பங்கேற்று விளையாட உள்ளனர். பட்லர், ரஷீத் கான், மார்கன், மென்டிஸ் போன்ற வீரர்கள் இதில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

ஜோகர்னஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேபிட்டல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் என ஆறு அணிகள் பங்கேற்கின்றன. டபுள் ரவுண்ட் ராபின், அரையிறுதி மற்றும் இறுதி என தொடர் நடைபெற உள்ளது. இடையில் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 1 வரையில் தென் ஆப்பிரிக்க அணியின் சர்வதேச தொடர் அட்டவணை காரணமாக இந்த லீக் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மஞ்சள் ஜெர்ஸியில் களம் காணும் டூப்ளசி: ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2011 முதல் 2015 மற்றும் 2018 முதல் 2021 சீசன் வரை சென்னை அணிக்காக விளையாடியவர் டூப்ளசி. தற்போது அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ளார். இருந்தாலும் இந்த தென் ஆப்பிரிக்க லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான ஜோகர்னஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் செயல்பட உள்ளார். இதன் மூலம் மீண்டும் மஞ்சள் ஜெர்ஸி அணிந்துள்ளார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in