உனக்கென்ன வேணும் சொல்லு... | மகளுடன் கோலி - அனுஷ்கா தம்பதியர் க்யூட் வாக்

மகள் மற்றும் மனைவியுடன் கோலி
மகள் மற்றும் மனைவியுடன் கோலி
Updated on
1 min read

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகர் அனுஷ்கா சர்மா தம்பதியர் தங்கள் செல்ல மகள் வாமிகா உடன் கடலோரத்தில் ஒரு க்யூட் வாக் சென்றுள்ளனர். அதனைப் புகைப்படமாக கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது, இப்போது ரசிகர்களின் மத்தியில் பரவலான பார்வையைப் பெற்றுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆன கோலி நாளை இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளார். டி20 தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அந்த ஓய்வு நேரத்தை தனது குடும்பத்துடன் செலவிட்டுள்ளார் அவர்.

கடந்த சில நாட்களாகவே அவரது பயணம் சார்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பார்க்க முடிந்தது. இந்தச் சூழலில் மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகா உடன் கடலோரத்தில் பொடி நடையாக வலம் வந்துள்ளார். அந்தப் படத்தைதான் இப்போது பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களின் பார்வையை பெற பலரும் அகற்கு லைக் மற்றும் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். கோலி எதிர்வரும் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என சில கமெண்டுகள் வந்திருந்தை பார்க்க முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in