சென்னை மாரத்தான்: வினோத் முதலிடம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற போட்டியாளர்கள்.
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற போட்டியாளர்கள்.
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நடைபெற்ற தி ஃபிரஷ்வொர்க்ஸ் சென்னை மாரத்தான் போட்டியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த வினோத் குமார் ஸ்ரீநிவாசன் முதலிடம் பிடித்தார்.

இந்த முழு மாரத்தான் போட்டியை சென்னை நேப்பியர் பாலத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜெயந்த் முரளி தொடங்கிவைத்தார். அரை மாரத்தான் போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும், 10 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் தொடங்கிவைத்தனர்.

இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் ஆண்கள் பிரிவில் வினோத் குமார் ஸ்ரீநிவாசன் முதலிடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த பிரிகிட் ஜெரண்ட் முதலிடம் பிடித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in