Published : 08 Jan 2023 06:23 AM
Last Updated : 08 Jan 2023 06:23 AM
ஜாம்ஷெட்பூர்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னையின் எப்சி – ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் மோதின. ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் 17 மற்றும் 56-வது நிமிடத்தில் ரித்விக் தாஸ் கோல் அடித்தார்.
சென்னை அணி இரு கோல்களை வாங்கிய பின்னரும் நம்பிக்கை தளராமல் துடிப்புடன் விளையாடியது. 60-வது நிமிடத்தில் வின்சி பாரெட்டோவும், 68-வது நிமிடத்தில் பீட்டர் ஸ்லிஸ்கோவிக்கும் கோல் அடித்து அசத்தியதால் போட்டியை டிராவில் முடிக்க முடிந்தது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் ஜாம்ஷெட்பூர் 13 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 டிரா, 9 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 10-வது இடம் வகிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT