

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கிற்கும், பாலிவுட் நடிகை ஹசல் கீச்சுக்கும் சண்டிகரில் உள்ள குருத்வாராவில் நேற்று சீக்கிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். எளிய முறையில் நடைபெற்ற திருமணத்தில் இருவீட்டினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் மணமக்களின் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமணம் முடிவடைந்ததும் சண்டிகரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு திருமண தம்பதி சென்றனர்.
திருமணத்தையொட்டி நேற்றுமுன்தினம் இரவு சண்டீகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காக்டெய்ல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பலர் பங்கேற்றனர்.
7ம் தேதி வரவேற்பு
வரும் 2-ம் தேதி கோவாவில் யுவராஜ்சிங்-ஹசல் கீச்சுக்கு இந்துமுறைப்படியும் திருமணம் நடைபெறு கிறது. அதை தொடர்ந்து 7-ம் தேதி டெல்லியில் ஆடம் பரமாக வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.