

சென்னை: அகிலேஷ் தாஸ் குப்தா மெமோரியல் அகில இந்திய சீனியர் தரவரிசை பாட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்சீவி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் சதீஷ்குமாரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தேசிய தரவரிசைப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரித்விக் சஞ்சீவி.