Published : 02 Jan 2023 08:48 PM
Last Updated : 02 Jan 2023 08:48 PM

மறக்குமா நெஞ்சம் | இதே நாளில் 1992-ல் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச களத்தில் அறிமுகமான ஷேன் வார்னே

ஷேன் வார்னே | கோப்புப்படம்

சிட்னி: இதே நாளில் கடந்த 1992-ல் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமாகி இருந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே. அப்போது அவருக்கு 22 வயதுதான். அவர் கிரிக்கெட் உலகை தனது மாயாஜால பந்து வீச்சினால் ஆட்சி செய்யப் போகிறார் என யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை.

அதற்கு அவரது முதல் போட்டியின் செயல்பாடும் ஒரு காரணம். இந்திய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 1992, ஜனவரி 2-ம் தேதி நடைபெற்ற போட்டியில் அவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 45 ஓவர்கள் வீசி ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருந்தார். 150 ரன்களை கொடுத்திருந்தார். அந்த தொடர் அவருக்கு சுமாரான தொடராகவே அமைந்தது.

ஆனால், அதன்பிறகு தனது பந்து வீச்சால் தரமான பேட்ஸ்மேன்களுக்கே கடினமான பவுலராக தன்னை வெளிக்கட்டினார். 2007 வரை சர்வதேச களத்தில் விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 708 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். லெக் ஸ்பின் எனும் கலையில் கைதேர்ந்த மாஸ்டராக வலம் வந்தார். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் 293 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். ஒட்டுமொத்தமாக 1,001 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய அதிசய பவுலர்.

1999 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் மூலம் அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராகவும் அசத்தினார். ‘பால் ஆப் தி செஞ்சுரி’ என போற்றப்படும் நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசி அசத்தினார். ஐபிஎல் அறிமுகம் சீசனின் போதே ராஜஸ்தான் அணியை திறம்பட வழிநடத்தி கோப்பை வென்று அசத்தினார். தனது 52-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x