ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருதை 4-வது முறையாக வென்றார் ரொனால்டோ: கனவு நிறைவேறியதாக பூரிப்பு

ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருதை 4-வது முறையாக வென்றார் ரொனால்டோ: கனவு நிறைவேறியதாக பூரிப்பு
Updated on
1 min read

கால்பந்து அரங்கில் ஆண்டு தோறும் சிறந்து விளங்கும் வீரர் களுக்கு பிபா சார்பில் பால்ஆன் டி ஓர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதை போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார்.

போர்ச்சுக்கல் அணி இந்த ஆண்டு யூரோ கோப்பையை வென்றிருந்தது. இதில் அணியின் கேப்டனாக செயல்பட்ட ரொனல்டோ முக்கிய பங்குவகித் தார். மேலும் கிளப் அணியான ரியல்மாட்ரீட் இந்த ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதிலும் ரொனால்டோவின் பங்களிப்பு அதிகம் இருந்தது.

பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை ரெனால்டோ பெறுவது இது 4-வது முறையாகும். இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் ரெனால்டோவுடன், அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, பிரான்சின் கிரிஸ்மான், லூயிஸ் சுவாரஸ், நெய்மர், கராத் பாலே உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் இருந்து ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். பாரிஸில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சியில் ரொனால்டோ வுக்கு விருது வழங்கப்பட்டது. விருதை பெற்ற அவர் கூறும் போது,

‘‘எனது கனவு மீண்டும் நிறை வேறி உள்ளது. 4-வது முறையாக இந்த விருதை வெல்வது பெருமை யாக உள்ளது. நான்கு முறை விருதுகளை வெல்வேன் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

எனது தேசிய அணியின் சக வீரர்களுக்கும், ரியல்மாட்ரீட் அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக் கும் நன்றி தெரிவித்துக்கொள் கிறேன். தனிப்பட்ட முறையில் இந்த விருதை நான் பெறுவதற்கு அவர்கள்தான் உதவியாக இருந்துள்ளனர். இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். ஏனெனில் இது எளிதான வெற்றி இல்லை’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in