Published : 28 Dec 2022 05:26 PM
Last Updated : 28 Dec 2022 05:26 PM
துபாய்: ஐசிசி வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் இடக்கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளார். மொத்தம் நான்கு வீரர்கள் இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் வெளியாக தொடங்கி உள்ளன. வரும் 30-ம் தேதி வரையில் இந்த பரிந்துரை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், வளர்ந்து வரும் வீரர் மற்றும் வீராங்கனை என மொத்தம் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்சன், நியூஸிலாந்து அணியின் ஃபின் ஆலன், ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஸாத்ரன் ஆகியோர் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அர்ஷ்தீப் சிங்: 23 வயதான அர்ஷ்தீப் சிங், உள்ளூர் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருபவர். ஐபிஎல் அரங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஜூலை வாக்கில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமானார். இடது கை பந்துவீச்சாளர். இதுவரை 21 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். இவரது பவுலிங் எக்கானமி 8.17.
Presenting, the nominees for the ICC Emerging Men’s Cricketer of the Year 2022
Find out
#ICCAwardshttps://t.co/9FejQ0eRgq— ICC (@ICC) December 28, 2022
ஐசிசி வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் மற்றும் யாஸ்திகா பாட்டியா இடம் பிடித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT