இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா தொடர் எளிதாக இருக்கும்: விருத்திமான் சஹா கருத்து

இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியா தொடர் எளிதாக இருக்கும்: விருத்திமான் சஹா கருத்து
Updated on
1 min read

இந்தியாவில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஆடவிருப்பதை முன்னிட்டு கருத்து கூறிய விருத்திமான் சஹா ஆஸ்திரேலியா தொடர், நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரை விட எளிதாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

“பார்த்திவ் படேலுக்கும் எனக்கும் போட்டி கிடையாது. எனது வாய்ப்புகளை பயன்படுத்த விரும்புகிறேன். நான் யாருடனும் போட்டி போடவில்லை. பார்த்திவ் படேல் நன்றாக ஆடிவருகிறார் அணியும் வெல்கிறது எனவே அது நல்லதுதான்.

நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. பார்த்திவ் படேலும் அணிக்குள் நுழைய முயற்சிகள் மேற்கொண்டார், எனவே அணித்தேர்வாளர்கள் எது சரியென தீர்மானிக்கிறார்களோ அது சரியானதாகவே இருக்கும்.

ஆசியாவில் இந்தியா நல்ல வெற்றிகளை குவித்து வருவதால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை விட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் எளிதாகவே இருக்கும். அந்த அணியில் சில புதிய வீரர்கள் இந்திய மண்ணில் ஆடியதில்லை. அதனால் அவர்களுக்கு அது எளிதல்ல. நம் அணியின் சமீபத்திய பார்மும் ஆஸ்திரேலியர்களுக்கு கடினத்தை அதிகரிக்கும்.

மீண்டும் பேட் செய்கிறேன், எனக்கு எந்த வித உடல் பிரச்சினையும் இல்லை. நான் தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் பயிற்சி மேற்கொண்டேன், ஆனால் அங்கு பேட்டிங் செய்யவில்லை, இங்கு தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்று கொல்கத்தாவில் கால்பந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சஹா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in