

ரஞ்சி கோப்பை கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் விசாகப் பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழகம்-கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
தமிழக அணி லீக் ஆட்டங் களில் சிறப்பாக விளையாடி 26 புள்ளிகளை பெற்றது. கேப்டன் அபிநவ் முகுந்த், கவுசிக் காந்தி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். கவுசிக் காந்தி இந்த சீசனில் 8 ஆட்டத்தில் 3 சதம், ஒரு அரை சதத்துடன் 709 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 202 ரன்கள் விளாசினார்.
அபிநவ் முகுந்த் 3 சதத்துடன் 672 ரன்களும், தினேஷ் கார்த்திக் ஒரு சதத்துடன் 592 ரன்களும் விளாசி உள்ளனர். பந்து வீச்சில் விக்னேஷ் 32 விக்கெட்களும், அஸ்வின் கிரைஸ்ட் 27 விக்கெட் களும் கைப்பற்றி உள்ளனர். இவர்கள் கால் இறுதியிலும் அசத்தக்கூடும். இதற்கிடையே காயம் காரணமாக இந்த ஆட்டத் தில் முரளி விஜய், அஸ்வின் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணி லீக் ஆட்டங் களில் 5 வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா என மொத்தம் 37 புள்ளி களை பெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடை பெற்ற டெஸ்ட்டில் முச்சதம் விளாசிய கருண் நாயர், ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட கே.எல்.ராகுல் ஆகி யோர் கர்நாடக அணிக்காக களமிறங்க உள்ளனர். இவர் களுடன் மணீஷ் பாண்டேவும் விளையாட உள்ளார். இரு அணிகளும் பலம் வாய்ந்தவை யாக இருப்பதால் வெற்றி பெற கடும் போட்டி நிலவக்கூடும்.