

கொரியாவின் ஜெஜூ நகரில் நடைபெற்று வரும் கொரியா ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் காஷ்யப் அரை இறுதிக்கு முன்னேறினார்.
காஷ்யப் தனது கால் இறுதியில் 6-ம் நிலை வீரரான கொரியாவின் ஜியோனை எதிர்த்து விளையாடினார். இதில் காஷ்யப் 18-21, 21-8, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
லண்டன் ஒலிம்பிக்கில் கால் இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்த காஷ்யப் அரை இறுதியில் முதல் நிலை வீரரான கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து விளையாட உள்ளார்.