

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 22 தங்கப் பதக்கம் உள்ளிட்ட 61 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்து சாதனைப் படைத்தது. 2022-ம் ஆண்டில் மத்திய விளையாட்டுத் துறையின் செயல்பாடுகள்...
2022-ல் இந்தியா நடத்திய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்:
குஜராத்தில் தேசிய விளையாட்டு: 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி 2022 அக்டோபர் 12-ந் தேதி குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டுப் போட்டியை மீண்டும் நடத்தியிருப்பதில் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் பங்களிப்பு போற்றத்தக்கது.
கேலோ இந்தியா திட்டம்
தேசிய ஊக்க மருந்து தடுப்பு மசோதா 2021 - தேசிய ஊக்க மருந்துத் தடுப்பு முகமை (என்ஏடிஏ), தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் (என்டிடிஎல்) மற்றும் இதர ஊக்க மருந்து பரிசோதனை அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான வழிகாட்டு முறைகளை நிர்ணயிக்கும் தேசிய ஊக்கமருந்துத் தடுப்பு மசோதா 2021 நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் 2022, ஜூலை 7-ந் தேதியும், மாநிலங்களவையில் 2022, ஆகஸ்ட் 3-ந் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இந்த புதியச் சட்டம் ஊக்கமருந்துத் தடுப்பு தேசிய வாரியத்தை அமைக்கவும், அதன் மூலம் நம்நாட்டு விளையாட்டு வீரர்களின் ஊக்க மருந்துத் தடுப்புச் செயல்களை ஒழுங்குப்படுத்தவும் வழிவகை செய்கிறது.