IND vs BAN | அதிரடியில் மிரட்டிய ரிஷப் பந்த் 93 ரன்களில் அவுட்

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்
Updated on
1 min read

டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 105 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அவுட்டானார் ரிஷப் பந்த். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி வேக வேகமாக ரன் குவித்தார் அவர்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் இந்திய அணி 100 ரன்கள் எடுப்பதற்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. கேப்டன் கே.எல்.ராகுல், கில், புஜாரா, கோலி ஆகியோர் வரிசையாக அவுட் ஆகி இருந்தனர்.

பின்னர் ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்து 159 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். மொத்தம் 105 பந்துகளை எதிர்கொண்டு 93 ரன்கள் குவித்தார் பந்த். இதில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதில் ஒரு சிக்ஸர் 100 மீட்டருக்கும் மற்றொரு சிக்ஸர் 102 மீட்டருக்கும் விளாசி இருந்தார். அவரது டிரேட் மார்க் ஒற்றை சிக்ஸரும் இதில் அடங்கும்.

இருந்தாலும் அவரால் சதம் பதிவு செய்ய முடியவில்லை. 90+ ரன்களில் அவர் ஆறாவது முறையாக அவுட் ஆகியுள்ளார். 70 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in