

கொச்சி: அடுத்த சில மணி நேரங்களில் ஐபிஎல் 2023 சீசனுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு என்பதை விரிவாக பார்ப்போம்.
பத்து அணிகளும் ஏலத்தில் யாரை வாங்கலாம் என தங்கள் கைவசம் உள்ள தொகையுடன் கணக்கை கூட்டி கழித்து பார்த்து வருகிறது. அதிகபட்சமாக 87 வீரர்கள் வரையில் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான ரேஸில் 407 வீரர்கள் உள்ளனர். டேக்டிக்கல் சப்ஸ்டிடியூட் முறையில் மாற்று வீரர்கள் எதிர்வரும் சீசன் முதல் களம் காண உள்ளனர்.
இந்த முறை வழக்கம் போல பத்து அணிகளும் அதன் அதிகாரபூர்வ மைதானத்தில் விளையாட உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் பிசிசிஐ தரப்பில் உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் என அணிகள் போட்டிகளில் விளையாட உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.
10 அணிகளின் கைவசம் உள்ள தொகை விவரம்