IPL 2023 | ஏலத்தில் பங்கேற்கும் அதிக வயது வீரர்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் 2023 சீசனுக்கான மினி ஏலம் நாளை கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களில் அதிக வயதுடைய வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.

பத்து அணிகளும் ஏலத்தில் யாரை வாங்கலாம் என தங்கள் கைவசம் உள்ள தொகையுடன் கணக்கை கூட்டி கழித்து பார்த்து வருகிறது. அதிகபட்சமாக 87 வீரர்கள் வரையில் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான ரேஸில் 407 வீரர்கள் உள்ளனர். டேக்டிக்கல் சப்ஸ்டிடியூட் முறையில் மாற்று வீரர்கள் எதிர்வரும் சீசன் முதல் களம் காண உள்ளனர்.

இந்த முறை வழக்கம் போல பத்து அணிகளும் அதன் அதிகாரப்பூர்வ மைதானத்தில் விளையாட உள்ளன. இது கடந்த செப்டம்பர் மாதம் உறுதி செய்யப்பட்டது. அதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

ஏலத்தில் பங்கேற்கும் மூத்த வயது வீரர்கள்

  • அமித் மிஸ்ரா - இந்தியா - 40 வயது
  • முகமது நபி - ஆப்கானிஸ்தான் - 37 வயது
  • டேவிட் வைஸ் - நமீபியா - 37 வயது
  • ரிலே ரோசோவ் - தென் ஆப்பிரிக்கா - 36 வயது
  • ஷகிப் அல் ஹசன் - வங்கதேசம் - 36 வயது
  • சிக்கந்தர் ராசா - ஜிம்பாப்வே - 36 வயது
  • ஆண்ட்ரூ டை - ஆஸ்திரேலியா - 36 வயது
  • ஹென்ரிக்ஸ் - ஆஸ்திரேலியா - 36 வயது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in