Published : 06 Dec 2016 06:39 AM
Last Updated : 06 Dec 2016 06:39 AM

2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: பதிலடி கொடுக்குமா நியூஸிலாந்து - வில்லியம்சனுக்கு 100-வது ஆட்டம்

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இன்று நடைபெறுகிறது.

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கான்பராவில் இந்திய நேரப்படி இன்று காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் நியூஸிலாந்து அணி தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் விளையாடக்கூடும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் படுதோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. முதல் போட்டியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 164 ரன்கள் விளாசி அணியின் ஒட்டுமொத்த ரன்குவிப்பில் முக்கிய பங்காற்றினார். இன்றைய ஆட்டத்தி லும் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

நியூஸிலாந்து தொடக்க வீரரான மார்ட்டின் குப்தில் கடந்த ஆட்டத் தில் தனிநபராக போராடினார். 102 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்த அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணை யாக ரன் சேர்க்க தவறினர்.

கடைசி கட்டத்தில் ஓவருக்கு 9 ரன்கள் விகிதம் தேவைப்பட்ட நிலையில் காலின் முன்ரோ, மேட் ஹென்றி ஜோடி அதிரடியாக விளையாடியது. ஆனால் இவர்களை 44 ஓவரில் கம்மின்ஸ் வெளியேற்றியதால் தோல்வி தவிர்க்க முடியாததாக அமைந்தது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என கருதப்படுகிறது. கான்பரா மைதானம் வழக்கமாகவே ரன் குவிப்புக்கு சாதகமானதுதான். எனினும் இங்கு நடைபெற்ற கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஆரோன் பின்சுக்கு கான்பரா மைதானம் மிகவும் ராசியானது. கடைசியாக அவர் இங்கு விளை யாடிய 3 ஆட்டங்களில் இரு சதங் கள் அடித்துள்ளார். சிட்னி ஆட்டத் தில் டக்-அவுட் ஆன அவர் இன்று ரன்வேட்டை நிகழ்த்தக்கூடும்.

இரு அணியிலும் இன்று சிறு மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் போட்டி தொடர்பாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ் வெல் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் நியூஸிலாந்து அணியில் கடந்த ஆட்டத்தில் அறிமுக பந்து வீச்சாளராக விளையாடிய பெர்குசன் நீக்கப்படக்கூடும். சிட்னி போட்டியில் அவர் 9 ஓவர்கள் வீசிய நிலையில் 73 ரன்களை வாரி வழங்கியிருந்தார். மேலும் 4 நோ பால்கள் வீசி, 4 ப்ரீஹிட்டுகளையும் தாரை வார்த்தார். இதனால் பெர்குசன் நீக்கப்பட்டு டிம் சவுத்தி சேர்க்கப்படக்கூடும்.

மேலும் பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில் ஹென்றி நிக்கோல்ஸ் அணியிடம் இடம் பெற வாய்ப்புள்ளது. இன்றைய ஆட்டம் வில்லியம்சனுக்கு 100-வது ஒருநாள் போட்டியாகும். இதனால் அவர் மீது சற்று எதிர்பார்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x