பளு தூக்குதலில் ராணுவம், ரயில்வே அணிகள் சாம்பியன்

பளு தூக்குதலில் ராணுவம், ரயில்வே அணிகள் சாம்பியன்
Updated on
1 min read

நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய அளவில் ஆண் களுக்கான 69-வது சாம்பியன் ஷிப் மற்றும் பெண்களுக்கான 32-வது சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டிகளில் முறையே ராணுவம் மற்றும் ரயில்வே அணிகள் கோப்பையைத் தட்டிச்சென்றன.

75 கிலோ எடைப் பிரிவில் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மோனிகா தலால் 201 கிலோ எடையை தூக்கி முதல் பரிசு பெற்றார்.

ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவு போட்டியில் ரயில்வே அணியைச் சேர்ந்த ஜீமாத்ஜி சாங் 363 கிலோ எடை தூக்கி முதல் பரிசும், குருதிப் சிங் 361 கிலோ எடை தூக்கி இரண்டாம் பரிசும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜத்சி சிங் 344 கிலோ தூக்கி மூன்றாம் பரிசும் பெற்றனர்.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை ஆண்கள் பிரிவில் ராணுவ அணியும், பெண்கள் பிரிவில் ரயில்வே அணியும் தட்டிச்சென்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in