FIFA WC | வாகை சூடிய மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியினரை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் மெஸ்ஸி
முதல்வர் ஸ்டாலின் மற்றும் மெஸ்ஸி
Updated on
1 min read

சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த போட்டியில் இறுதிவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணியின் ஆட்டத்தையும் புகழ்ந்துள்ளார்.

பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அந்த அணி 1978 மற்றும் 1986-க்கு பிறகு சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“மிகச் சிறப்பான போட்டியாக அமைந்தது உலகக் கோப்பை இறுதிப் போட்டி. விட்டுக் கொடுக்காத பிரான்ஸ் அணியின் முயற்சியும், எம்பாப்பேவின் ஹாட்-ட்ரிக் கோலும் அபாரம்.

உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா மற்றும் GOAT மெஸ்ஸிக்கு எனது வாழ்த்துகள். மார்டினஸுக்கு எனது சிறப்பு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in