

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டியை காண பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிக்கெட்கள் வழங்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை யில் பள்ளி, கல்லூரி முதல்வர்களின் கையெழுத் துடன் கடிதம் கொண்டு வருபவர் களுக்கு இலவச டிக்கெட்கள் வழங்கப்படும். ஒரு கல்வி நிறுவனத்துக்கு அதிகபட்சம் 15 இலவச பாஸ்கள் வழங்கப்படும் என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.