IND vs BAN | அரை சதம் விளாசிய ஆல்-ரவுண்டர் அஸ்வின்: மீண்டும் ஒரு தரமான இன்னிங்ஸ்

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின்
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின்
Updated on
1 min read

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அஸ்வின் அரை சதம் பதிவு செய்துள்ளார். நெருக்கடியான நிலையில் அணி இருந்த போது மீண்டும் ஒரு தரமான இன்னிங்ஸ் அவரது பேட்டில் இருந்து வந்துள்ளது.

36 வயதான அஸ்வின், இந்திய அணிக்காக விளையாடும் 87-வது டெஸ்ட் போட்டி இது. 8-வது பேட்ஸ்மேனாக களம் காணும் அவர் தனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து அணிக்காக வழங்கி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 5 சதங்கள் பதிவு செய்துள்ளார். அதோடு 13 அரை சதங்களும் பதிவு செய்துள்ளார். 442 விக்கெட்டுகள் மற்றும் 2,989 ரன்களை அவர் குவித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 113 பந்துகளில் 58 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்துள்ளார் அவர். இதில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இந்த போட்டியில் 91 பந்துகளை சந்தித்து அரை சதம் விளாசி இருந்தார். மெஹதி ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 8-வது விக்கெட்டிற்கு குல்தீப் யாதவுடன் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் அஸ்வின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in