Published : 04 Dec 2016 12:30 PM
Last Updated : 04 Dec 2016 12:30 PM

ஆசிய பசுபிக் மிடில்வெயிட் சாம்பியன் போட்டியில் செகாவை நாக் அவுட் செய்வேன்: விஜேந்தர் சிங் நம்பிக்கை

இந்தியாவை சேர்ந்த தொழில் முறை குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங், கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவின் கெரி ஹோப்பை வீழ்த்தி ஆசிய பசுபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டத்தை கைப்பற் றினார்.

இந்நிலையில் இந்தப் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஆட்டத் தில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியனான பிரான்சிஸ் செகாவுடன் வரும் 17-ம் தேதி மோதுகிறார் விஜேந்தர் சிங். டெல்லியில் நடைபெற உள்ள இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

31 வயதான விஜேந்தர் சிங் இதுவரை மோதிய 7 போட்டி களிலும் தோல்வியை சந்திக்க வில்லை. மேலும் 6 போட்டிகளில் நாக் அவுட் வெற்றி பெற்றுள்ளார். அதேவேளையில் 34 வயதான செகா 43 போட்டிகளில் 32-ல் வெற்றி பெற்றுள்ளார். இதில் 17 நாக் அவுட் வெற்றிகளும் அடங்கும்.

16 வருட குத்துச்சண்டை வாழ்க்கையில் செகா 300 ரவுண்டுகளை சந்தித்துள்ளார். டபிள்யூபிஎப் உலக முன்னாள் சாம்பியனான செகா, தற்போது கண்டங்களுக்கு இடையேயான சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனா கவும் உள்ளார்.

செகாவை எதிர்கொள்ள விஜேந்தர் சிங் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளார். தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை தனது பயிற்சியாளரான லீ பியர்டுடன் கடினமாக உழைத்து வருகிறார். இந்நிலையில் செகாவுடனான போட்டி குறித்து விஜேந்தர் சிங் கூறியதாவது:

வெற்றி பெற வேண்டும். அதுவும் சிறப்பான வெற்றி பெறவேண்டும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் நாக்அவுட் வெற்றிதான். என்னை நோக்கி எந்த மாதிரியான சவால் உள்ளது என்பதை அறிவேன். செகா அனுபவம் வாய்ந்த வீரர். ஆனால் நான் இருமடங்கு கூடுதல் வலுவுடன் மோதுவேன்.

செகா என்மீது தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நானும் எனது பயிற்சியாளரும் சிறந்த திட்டம் வைத்துள்ளோம். தாக்குதல் தொடுப்பது தொடர்பாக கடந்த இரு மாதங்களாக கடினமாக பயிற்சிகள் மேற்கொண்டுள்ளேன். செகாவுக்கு எதிரான ஆட்டத்தில் எனது திட்டங்கள் பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

குத்துச்சண்டை என்றால் என்ன என்பது குறித்து போட்டி யின் போது எனக்கு பாடம் எடுப்ப தாக செகா கூறியுள்ளார். இதற் கான விடை 17-ம் தேதி நடை பெறும் போட்டியின் போது 2 முதல் 3-வது சுற்றுகளிலேயே அவருக்கு தெரியும். தொழில்முறை குத்துச் சண்டை வாழ்க்கையை தற்போது தான் தொடங்கி உள்ளேன்.

எனினும் 6 நாக் அவுட் வெற்றி பெற்றுள்ளேன். இந்த வெற்றிகள் அனைத்தும் அவ்வளவு எளிதாக கிடைத்தவை அல்ல. செகா, என்னுடைய நாட்டுக்கே வந்து பட்டத்தை தக்க வைக்கும் ஆட்டத் தில் எனக்கு எதிராக சவால்விட முடியாது. என்னைப் பற்றி அவருக்கு முழுமையாக தெரியாது.

யாரேனும் அவரது நலன் விரும்பிகள் இருந்தால் என்னை பற்றி அவரிடம் எடுத்துக்கூறுங்கள். இதுவரை எனக்கு எதிராக மோதிய 7 வீரர்களுமே அவர்களது வழிகளில் ஆக்ரோஷமாக சவால் விட்டவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு எனது சிறந்த ஆட்டத்தால் பதிலடி கொடுத்துள் ளேன். இந்த முறை செகாவுக்கு கடினமான நேரமாகவே இருக்கும்.

இவ்வாறு விஜேந்தர் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x