

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியின் தீப்தி சர்மா, 15 பந்துகளில் 36 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அவரது இந்த அதிரடி இன்னிங்ஸை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்காக விளையாடிய ஷெஃபாலி 21 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 28 ரன்கள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் 21 ரன்கள், தேவிகா 25 ரன்கள், ரிச்சா கோஷ் 36 ரன்கள் மற்றும் தீப்தி 36 ரன்கள் எடுத்திருந்தனர்.
இதில் தீப்தி சர்மா, 15 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 240. இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது.
அந்த அணியின் கேப்டன் அலிசா ஹீலி மற்றும் Beth Mooney இன்னிங்ஸை தொடங்கினர். ஹீலி, 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து மெக்ரத் பொறுப்புடன் இன்னிங்ஸை அணுகினார். இறுதி ஓவர்களில் அப்படியே தனது ஆட்டத்தை அதிரடியாக மாற்றி இருந்தார். 29 பந்துகளில் 40 ரன்களை அவர் எடுத்தார்.
மறுபக்கம் Mooney, 57 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். 18.1 ஓவர்களில் 173 ரன்களை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.