சென்னை ஓபனுக்கு ரூ.2 கோடி நிதி: தமிழக அரசு வழங்கியது

சென்னை ஓபனுக்கு ரூ.2 கோடி நிதி: தமிழக அரசு வழங்கியது
Updated on
1 min read

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை 2017-ல் நடத்த தமிழக அரசின் பங்களிப்பான ரூ.2 கோடியை, டென்னிஸ் சங்க தலைவர் எம்.ஏ. அழகப்பனிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டென்னிஸ் விளையாட்டில் உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தால் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படுகிறது. இப்போட்டி ஏடிபி பன்னாட்டு தரவரிசைப் போட்டிகளில் ஒன்றாகும். கடந்த 2005-ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இப்போட்டியை நடத்த முதல் முறையாக தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கினார்.

தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டில் இந்த நிதியை ரூ.2 கோடியாக உயர்த்தி வழங்க, தமிழ் நாடு டென்னிஸ் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, டென்னிஸ் போட்டியை நடத்த ஆண்டுதோறும் ரூ.2 கோடி நிதி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டு, அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.

வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை, சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் அரங்கில் நடக்கிறது. இப்போட் டியை சிறப்பாக நடத்த முதன்மை பிளாட்டினம் உபயதாரர் என்ற அடிப்படையில், தமிழக அரசின் பங்களிப்பான ரூ.2 கோடிக்கான காசோலையை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் எம்.ஏ.அழகப்பனிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், விளையாட்டுத் துறை செயலர் ராஜேந்திரகுமார், டென்னிஸ் சங்க கவுரவ தலைவர் நாகேஸ்வர ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் ஹிடன் ஜோஷி ஆகியோர் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in