

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. 32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் கோப்பையை வெல்லும் பெருங்கனவோடு இப்போது 8 அணிகள் சமர் செய்து வருகின்றன.
இந்தத் தொடரில் இன்னும் 8 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எட்டாவது போட்டியில் வாகை சூடும் அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் சூடும். இந்தத் தொடரில் இதுவரையில் 56 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஒரு போட்டிக்கு சராசரியாக 2.64 கோல் வீதம் 148 கோல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடரின் முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு சிறப்பு விருதுகள் கொடுக்கப்படும். அதில் முக்கியமான விருது தங்கக் காலணி (கோல்டன் பூட்). தொடரில் அதிக கோல்களை பதிவு செய்யும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருது இது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரையில் நடந்து முடிந்துள்ள ஆட்டத்தில் யார் அதிக கோல்களை பதிவு செய்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
இதில் போர்ச்சுகல் அணியின் ரமோஸ் ஒரே போட்டியில் 3 கோல்களை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் உள்ள எம்பாப்பே இரண்டு போட்டிகளில் தலா இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தார்.