

டேவிஸ் கோப்பையில் விளையா டும் இந்திய டென்னிஸ் அணியின் கேப்டனாக ஆனந்த் அமிர்தரா ஜும், பயிற்சியாளராக ஜீஷன் அலியும் இருந்து வருகிறார்கள். அவர்களின் பதவிக்காலம் இம் மாத இறுதியுடன் நிறைவடை கிறது. இந்திய அணியில் சமீப காலமாக வீரர்களிடையே இருந்து வரும் வேற்றுமைகள் காரணமாக வும், ஒழுங்கீனம் காரணமாகவும் இவர்களின் பதவிக்காலம் நீட்டிக் கப்படாது என்று கூறப்பட்டது. அவர்களுக்கு பதிலாக ரமேஷ் கிருஷ்ணன், நந்தன் பால் ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக ஆனந்த் அமிர்தராஜும், பயிற்சியாளராக ஜீஷன் அலியும் மேலும் சில காலம் தொடர வேண்டும் என்று முன்னணி டென்னிஸ் வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பம்பரி, சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஆகியோர் இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “ஆனந்த் அமிர்தராஜ், ஜீஷன் அலி ஆகியோ ரின் பதவிக்காலத்தில் இந்திய டென்னிஸ் அணி, குறிப்பிடத் தகுந்த பல வெற்றிகளைக் குவித் துள்ளது. இந்நிலையில் அவர் களை மாற்ற டென்னிஸ் சங்கம் முடிவெடுத்துள்ளதாக சில தகவல் கள் பத்திரிகைகள் மூலம் எங் களுக்கு தெரியவந்தது. அதனை நாங்கள் கடுமையாக எதிர்க் கிறோம். ஆனந்த் அமிர்தராஜ், ஜீஷன் அலி ஆகியோர் தங்கள் பதவிகளில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம்” என்று குறிப்பிட்டிருந் தனர்.