ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: 15 வருடங்களுக்கு பிறகு பட்டம் வெல்லுமா இந்தியா? -பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: 15 வருடங்களுக்கு பிறகு பட்டம் வெல்லுமா இந்தியா? -பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை
Updated on
2 min read

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் லக்னோவில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இந்திய அணி இறுதிப் போட் டிக்கு தகுதி பெறுவது இது 3-வது முறையாகும். 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த இந்திய அணி 1997-ல் நடைபெற்ற தொடரில் 2-வது இடத்தை பிடித்திருந்தது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் கூறும்போது,

‘‘இறுதிப் போட்டி நடைபெறும் நாள் இந்திய வீரர்களுக்கு மிகவும் முக்கியமான தினம். இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என நான் அவர்களிடம் மிகவும் வேண்டி கேட்டுக்கொள் கிறேன். தங்களது கழுத்தை எந்த நிறத்திலான பதக்கம் அலங்கரிக்க வேண்டும் என்பதை வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’’என்றார்.

இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் ரோலண்ட் ஓல்ட்மான்ஸ், ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் கூறும்போது,

‘‘சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்த வேண்டிய தருணம் வந்துள்ளது’’ என்றார்.

இன்றைய போட்டியை காண சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. ஸ்பெயின் அணிக்கு எதிரான கால் இறுதியிலும், ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான அரை இறுதியி லும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டு இந்திய அணிக்கு ஆதர வளித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

கால் இறுதியில் சற்று மந்தமாக விளையாடிய இந்திய அணி அரை இறுதியில் துடிப்புடன் செயல் பட்டு ஆஸ்திரேலியாவை பந்தாடி யிருந்தது. அரை இறுதியில் இந்திய அணியின் முன்கள வீரர்களான குர்ஜந்த் சிங், மந்தீப்சிங் ஆகியோர் இரு கோல்கள் அடித்து அசத்தினர். அதேவேளையில் நடுகளத்தில் கேப்டன் ஹர்ஜித் சிங் பலம் சேர்த்தார்.

இந்திய அணியின் தடுப்பு அரண்கள் சோர்வடைந்த போதும், கோல்கீப்பர் விகாஸ் தாகியா பெனால்டி ஷூட் அவுட்டில் நாயக னாக ஜொலித்தார். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி யதில் முக்கிய பங்கு வகித்த விகாஸ் தாகியா இன்றும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வெற்றி பெறுவதில் தடை இருக்காது.

இந்திய அணி பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றுவதில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத் தில் ஹர்மான்பிரீத் சிங், வருண் குமார் ஆகியோர் அசத்தும் பட்சத்தில் விரைவிலேயே கோல்கள் அடித்து முன்னிலை பெற வாய்ப்புள்ளது.

பெல்ஜியம் அணி தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 6 முறை சாம் பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை அரை இறுதியில் வீழ்த்தியிருந்தது. மேலும் ஹாலந்து, அர்ஜென்டினா போன்ற வலுவான அணிகளையும் இந்த தொடரில் பெல்ஜியம் வீழ்த் தியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பட்டம் வெல்வதில் இரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in