FIFA WC 2022 | இதுவரை 57,000 பேர்... - உலகக் கோப்பை போட்டிகளை நேரில் பார்க்க ஆர்வம் காட்டும் இந்திய ரசிகர்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தோகா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் போட்டிகளை நேரில் பார்க்க இந்திய ரசிகர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 57,000 இந்திய ரசிகர்கள் போட்டிகளை நேரில் கண்டுகளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 20-ம் தேதி அன்று ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கின. வரும் 18-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதுவரையில் குரூப் சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்றுகள் நடந்து முடிந்துள்ளன. குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இந்தச் சூழலில் இதுவரையில் நடந்து முடிந்துள்ள உலகக் கோப்பை போட்டிகளை பார்க்க இந்திய ரசிகர்கள் பெருந்திரளாக கத்தாருக்கு திரண்ட தகவல் வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவுக்கு அடுத்ததாக உலகக் கோப்பை போட்டிகளை நேரில் பார்க்க அதிகளவில் இந்திய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளை பார்க்க ஆர்வம் காட்டும் டாப் 5 நாடுகள் (குரூப் சுற்று வரையிலான எண்ணிக்கை)

  • சவுதி அரேபியா - 77,106
  • இந்தியா - 56,893
  • அமெரிக்கா - 36,236
  • பிரிட்டன் - 30,719
  • மெக்சிகோ - 25,533

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in