

11-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டி பிரிவில் இடம் பெற்ற இந்தியா தனது முதல் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மன்தீப்சிங் பீல்டு கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது. 46-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மான்பீரித் சிங் கோலாக மாற்றினார்.
60-வது நிமிடத்தில் வருண் குமார், பெனால்டி கார்னர் மூலம் கோல் அடிக்க இந்திய அணி 3-0 என வலுவான முன்னிலையை பெற்றது. அடுத்த 6-வது நிமிடத்தில் 4-வது கோலை அஜித் பாண்டே அடித்து அசத்தினார். கடைசி வரை கனடா அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் இந்திய அணி 4-0 என் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.