Published : 06 Dec 2022 06:59 AM
Last Updated : 06 Dec 2022 06:59 AM

FIFA WC 2022 | கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து மோதல்

லுசைல்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதவுள்ளன. லுசைல் மைதானத்தில் இரவு 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

கடந்து வந்த பாதை

போர்ச்சுகல்:

> 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது.

> 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேவை வென்றது.

> 1-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி.

சுவிட்சர்லாந்து:

> 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை வென்றது.

> 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.

> 0-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் தோல்வி.

> கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் யூசிபியோ (9 கோல்கள்) முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை சமன் செய்ய கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மேற்கொண்டு ஒரு கோல் மட்டுமே தேவை.

> 3 உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் சுவிட்சர்லாந்து வீரர் என்ற பெருமையை ஹெர்டன் ஷாகிரி பெற்றுள்ளார். அவர், உலகக் கோப்பைகளில் 5 கோல்களை அடித்துள்ளார். இந்த வகையில் செப் ஹூகியின் 6 கோல்கள் சாதனையை சமன் செய்ய ஷாகிரிக்கு இன்னும் ஒரு கோல் தேவையாக உள்ளது.

போர்ச்சுகல் சிறப்பம்சம்: 1966-ல் 3-வது இடம், 2006-ல் அரை இறுதிக்கு முன்னேற்றம்.

சுவிட்சர்லாந்து சிறப்பம்சம்: 1934, 1938, 1954-ல் கால் இறுதிக்கு முன்னேற்றம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x