Published : 05 Dec 2022 05:28 PM Last Updated : 05 Dec 2022 05:28 PM
2022-ல் இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான தோல்விகள் - ஒரு விரைவுப் பட்டியல்
நடப்பு 2022-ம் ஆண்டில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி அயலக மண்ணில் இதுவரை சந்தித்துள்ள தோல்விகள் குறித்து பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது. வங்கதேச அணி ஒரே ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்றது. இந்திய அணியின் இந்த மோசமான செயல்பாடு கிரிக்கெட் ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. சமூக வலைதளத்தில் அது குறித்து தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்தச் சூழலில் நடப்பு ஆண்டில் அயலக மண்ணில் மட்டும் இந்திய அணி தழுவிய தோல்விகள் இதோ..
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வி.
தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரில் 0-3 என தோல்வி.
இங்கிலாந்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி. இந்த போட்டி கடந்த 2021இல் விடுபட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வி.
நேற்று வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி.
WRITE A COMMENT