

சந்தோஷ் கோப்பைக்கான கால் பந்து போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் ஜனவரி 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடக்கிறது.
இதுதொடர்பாக கேரள கால் பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.அனில் குமார் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: சந்தோஷ் கோப் பைக்கான தகுதிச்சுற்று போட்டி கள் கோழிக்கோட்டில் ஜனவரி 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய அணி களும், ‘பி’ பிரிவில் தமிழ்நாடு, சர்வீசஸ், தெலங்கானா, லட்சத்தீவு கள் ஆகிய அணிகளும் இடம் பெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.