Published : 04 Dec 2022 08:01 AM
Last Updated : 04 Dec 2022 08:01 AM
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று இங்கிலாந்து - செனகல் அணிகள் மோதவுள்ளன. அல் பேத் மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை இரு அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளன. இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இங்கிலாந்து கடந்து வந்த பாதை..
> 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.
> 0-0 என்ற கணக்கில் அமெரிக்காவுக்கு எதிராக டிரா.
> 3-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது
செனகல் கடந்து வந்த பாதை..
> 0-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி.
> 3-1 என்ற கோல் கணக்கில் கத்தாரை தோற்கடித்தது.
> 2-1 என்ற கோல் கணக்கில் ஈக்வேடாரை வென்றது.
நட்சத்திர வீரர்கள்
மார்கஸ் ராஷ்ஃபோர்ட் (கத்தாரில் 3 கோல்கள் அடித்துள்ளார்)
கலிடோ கோலிபாலி (கத்தாரில் கோல் அடிக்கவில்லை)
> லீக் சுற்றில் வேல்ஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 2-வது கோலை மார்கஸ் ராஷ்ஃபோர்டு அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 100 கோல்கள் அடித்த 7-வது அணி என்ற மைல் கல்லை இங்கிலாந்து அணி எட்டியிருந்தது.
> செனகல் அணி 2-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடுகிறது. கடைசியாக அந்த அணி 2002-ம் ஆண்டு லீக் சுற்றை கடந்திருந்தது.
> ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி 21 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் கூட இங்கிலாந்து தோல்வியை சந்திக்கவில்லை. உலகக் கோப்பையில் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக 3 வெற்றிகளையும், 3 டிராக்களையும் பதிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT