

எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசனில் விளையாட மொத்த, 991 வீரர்கள் பதிவு செய்திருப்பதாக ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் 277 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 714 இந்திய வீரர்களும் அடங்குவர். வரும் 23-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் ஐபில் 2023 ஏலம் நடைபெற உள்ளது.
இந்த ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் கைவசம் உள்ள தொகையுடன் கூடுதல் 5 கோடி ரூபாய் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடிய 185 வீரர்கள், உள்ளூர் அளவில் விளையாடிய 786 வீரர்கள் அடங்குவர் என தெரிகிறது.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, நியூஸிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, அமீரகம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே வீரர்கள் அடங்குவர். அதிகபட்சமாக சுமார் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 57 வீரர்கள் ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.