Published : 30 Nov 2022 08:49 PM
Last Updated : 30 Nov 2022 08:49 PM

FIFA WC 2022 | அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா மெஸ்ஸியின் அர்ஜென்டினா? - ஒரு பார்வை

மெஸ்ஸி | கோப்புப்படம்

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது போலந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெரிந்துவிடும். ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேற அந்த அணிக்கான வாய்ப்பு எப்படி என்பதை பார்ப்போம்.

கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது அர்ஜென்டினா. ஆனால், குரூப் சுற்றின் முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இருந்தாலும் அடுத்த போட்டியில் மெக்சிகோவுக்கு எதிராக வெற்றி பெற்றது. அதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் உயிர்ப்போடு வைத்தது.

இதுவரை 7 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில், அர்ஜென்டினா அணிக்கான வாய்ப்பு குறித்து அறிவோம். அந்த அணி குரூப் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

  • தோகாவில் உள்ள 974 மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் போலந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அர்ஜென்டினா விளையாடுகிறது.
  • இந்தப் போட்டியில் தோல்வியை தழுவினால் தொடரை விட்டு வெளியேற வேண்டும்.
  • ஒருவேளை இந்தப் போட்டி டிராவில் முடிந்தால் அடுத்த சுற்றுக்கு அர்ஜென்டினா செல்லும் வாய்ப்பு இதே பிரிவில் உள்ள மெக்சிக்கோ மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கு இடையிலான முடிவுகளை பொறுத்து இருக்கும். அதற்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. அவை:
  1. மெக்சிக்கோ - சவுதி அரேபியா இடையிலான போட்டி டிரா ஆனால், கோல் வித்தியாசத்தில் அர்ஜென்டினா முன்னேறும்.
  2. மெக்சிக்கோ வெற்றி பெற்றால் கோல் வித்தியாசத்தை பொறுத்து அர்ஜென்டினா அல்லது மெக்சிக்கோ ‘சி’ பிரிவில் இரண்டாம் இடம்பிடித்து அடுத்த சுற்றுக்கு செல்லும்.
  3. சவுதி வெற்றி பெற்றால் அர்ஜென்டினா வெளியேறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x