

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது போலந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெரிந்துவிடும். ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேற அந்த அணிக்கான வாய்ப்பு எப்படி என்பதை பார்ப்போம்.
கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது அர்ஜென்டினா. ஆனால், குரூப் சுற்றின் முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இருந்தாலும் அடுத்த போட்டியில் மெக்சிகோவுக்கு எதிராக வெற்றி பெற்றது. அதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் உயிர்ப்போடு வைத்தது.
இதுவரை 7 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில், அர்ஜென்டினா அணிக்கான வாய்ப்பு குறித்து அறிவோம். அந்த அணி குரூப் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.