Published : 29 Nov 2022 10:55 PM
Last Updated : 29 Nov 2022 10:55 PM

FIFA WC 2022 | குரூப் சுற்றோடு வெளியேறியது கத்தார்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து

நெதர்லாந்து - கத்தார் இடையிலான போட்டி

அல் கோர்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளது கத்தார் அணி. மறுபக்கம் 2 வெற்றிகளை பதிவு செய்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

குரூப் ‘ஏ’ பிரிவில் இரு அணிகளும் இடம் பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இதுவே இந்த சுற்றில் கடைசி போட்டி. இதில் 2-0 என்ற கணக்கில் கத்தாரை வீழ்த்தி நெதர்லாந்து அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த போட்டியில் 26 மற்றும் 49-வது நிமிடத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தது அந்த அணி.

செனகல் அணிக்கு எதிராக வெற்றி, ஈக்வேடார் அணி உடன் டிரா மற்றும் காத்தார் அணிக்கு எதிராக வெற்றி என அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது நெதர்லாந்து. 23 வயதான நெதர்லாந்து வீரர் கோடி காக்போ, மூன்று போட்டிகளிலும் தலா ஒரு கோல் பதிவு செய்துள்ளார்.

இதே பிரிவில் இடம் பெற்றுள்ள செனகல் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் ஆகிய அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x