FIFA WC 2022 | உருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல்

போர்ச்சுகல் வீரர்கள்
போர்ச்சுகல் வீரர்கள்
Updated on
1 min read

லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் உருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது போர்ச்சுகல். இந்த போட்டியில் போர்ச்சுகல் அணிக்காக இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தார் ப்ரூனோ பெர்னாண்டஸ்.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கத்தார் நாட்டில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி. ஆட்டத்தில் சுமார் 60 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் அந்த அணி வீரர்கள்.

ஆட்டத்தில் 54 மற்றும் 93-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தினார் ப்ரூனோ பெர்னாண்டஸ். அதில் அவர் பதிவு செய்த இரண்டாவது இரண்டாவது கோல் பெனால்டி வாய்ப்பில் வந்தது. இந்த வெற்றியின் மூலம் நாக்-அவுட் சுற்றான ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியுள்ளது போர்ச்சுகல். இதில் முதல் கோலை வலைக்குள் தள்ளி இருந்தார் பெர்னாண்டஸ். அப்போது அந்த பந்தை ரொனால்டோ ஹெட் செய்தது போல இருந்தது. அவரும் தான் கோல் பதிவு செய்ததை போலவே கொண்டாடி இருந்தார். பின்னர் அதில் அவருக்கு பங்கு இல்லை என்பது தெரிந்தது. இது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் விவாதமானது.

முன்னதாக, பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி இருந்தன. மற்ற பிரிவுகளில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மூன்றாவது லீக் போட்டியின் முடிவை பொறுத்தே அமைந்துள்ளது. ஏனெனில் வெற்றி, தோல்வி, டிரா என முடிவுகள் மாறி அமைந்ததே அதற்கு காரணம். ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியுள்ள மூன்று அணிகளும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in