

சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தவிர நியூஸிலாந்து அணியின் கேப்டனாக உள்ள மெக்குல்லம் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பெலிஸ்ஸிஸ், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டனாக இருந்த பிராவோ ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இப்படி 4 கேப்டன்கள் உள்ள அணிக்கு தோனி தலைமை வகிப்பதை சுட்டிக்காட்டி மெக்குல்லம் கூறியுள்ளது: அணியில் இருக்கும் கேப்டன்களில் தோனி தான் வெற்றிகரமான, அதிக அனுபவமிக்க கேப்டன். களமிறங்கிய பின்பு அவர் முடிவுகளை அவர் தனியாகவே எடுப்பார். இதுதான் அவரது சிறப்பம்சம்.
உலகின் மிகச்சிறந்த கேப்டன் என்றபோதிலும் தோனி மிகவும் பணிவாகவும் இனிமையாகவும் பேசக் கூடியவர். அவர் கேப்டன்களின் கேப்டன்.