

19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் ஜனவரி மாதம் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா யு-19 அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து நேற்று வெளியிட்டன. இதன்படி ஒருநாள் போட்டி தொடர் மும்பையிலும், டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத் திலும் நடைபெற உள்ளது.
முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 1-ம் தேதி வான்கடே மைதானத்திலும், 2-வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 1-ம் தேதி பிராபோர்ன் மைதானத்திலும், 3-வது ஒருநாள் போட்டி 3-ம் தேதி பிராபோர்ன் மைதானத்திலும், 4-வது ஒருநாள் போட்டி 6-ம் தேதி வான்கடே மைதானத்திலும், 5-வது ஒருநாள் போட்டி வான்கடே மைதானத்திலும் நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையும், 2-வது டெஸ்ட் போட்டி 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.