

மும்பை, சென்னையில் நடைபெறவிருக்கும் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.1.33 கோடி தொகை செலவு செய்ய உச்ச நீதிமன்றம் பிசிசிஐ-க்கு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறும் 5 ஒருநாள் போட்டிகளுக்கான செலவுத்தொகையாக ரூ.3.79 கோடிக்கு பிசிசிஐ கேட்டிருந்த அனுமதியை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மாறாக ஒரு போட்டிக்கு ரூ.25 லட்சம் மட்டும் வங்கியிலிருந்து எடுக்க அனுமதி அளித்தது. ஆகமொத்தம் ரூ.2.83 கோடி
இதோடு மட்டுமல்லாமல், போட்டிக்கான செலவுகள் தணிக்கைக்கு உட்பட்டது என்றும் இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளுக்கான வரவு செலவு கணக்குகளை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.