FIFA WC 2022 | சவுதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு

FIFA WC 2022 | சவுதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு
Updated on
1 min read

ரியாத்: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் அர்ஜென்டினாவைத் தோல்வியுறச் செய்த சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மிகவும் வலுவான அணியாகக் கருதப்படும் அர்ஜென்டினாவை லீக் சுற்றில், சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை மிகவும் அதிகம். இந்தக் காரின் விலை ரூ.9 கோடி முதல் 10.50 கோடி வரை உள்ளது. இந்த அறிவிப்பால் சவுதி அரேபிய வீரர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in